பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கங்குலி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.கங்குலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். இந்த நிலையில் இன்று மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றுள்ளார். பிசிசிஐ-யின் 39-வது தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.