கொரோனா வைரஸால் அரசின் நெருக்கடி அதிகரித்திருப்பது அனைவரும் அறிந்ததே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஓராண்டு சம்பளத்திலிருந்து 30 சதவிகிதத்தை அரசுக்கு கொடுக்க உள்ளார். கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் படியாகவும், நிவாரணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பலாம் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதிக்கு பல நடிகர்கள் மற்றும் அமைச்சர்கள் நிதி அளித்திருந்தனர். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களும் தனது ஒரு […]
அனைத்து மாநில ஆளுநர்களுடன், குடியரசுத்தலைவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில ஆளுநர்களுடன், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இந்தக்கூட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் பங்கேற்றுள்ளார். நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று மாநில ஆளுநர்கள் […]
2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று காலை பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார்.நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி […]
சுவிசர்லாந்து,ஐஸ்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.9 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் ராம்நாத் கோவிந்த் முதல்கட்டமாக ஐஸ்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச உள்ளார்.மேலும் ஐஸ்லாந்து நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை தனித்தனியே சந்தித்து பேசுகிறார்.இந்த பயணத்தை முடித்து கொண்டு வருகின்ற 11-ஆம் தேதி சுவிசர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.சுவிசர்லாந்தில் இருந்து வருகின்ற 15-ஆம் தேதி ஸ்லோவேனியா நாட்டிற்கு […]
இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நேற்று நடைபெற்றது.இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு மோடிக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.