பாலியல் உறவு வைத்திருந்த ஆபாச நடிகை, தமக்கு வழங்கப்பட்ட தொகையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் திருப்பி அளிக்க தயார் என்று தெரிவித்துள்ளார். ஸ்டோர்மி டேனியல்ஸ் (Stormy Daniels) என்ற அந்தப் பெண், டிரம்புடன் பாலியல் ரீதியாக உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி வெளியில் வாய் திறக்கக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டு அதற்காக அவருக்கு இந்திய மதிப்பில் 85 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக அதிபரின் வழக்கறிஞரே கூறி இருந்தார். இதுதொடர்பாக தற்போது வழக்கு தொடர்ந்துள்ள அந்த நடிகை, […]
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா அமெரிக்காவுக்கு எத்தகைய இறக்குமதி வரியை விதிக்கிறதோ அதற்கு இணையான வரியை அமெரிக்காவும் விதிக்கும் என்று தெரிவித்துள்ளார். டிரம்ப் ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனத்துக்கு இந்தியாவில் விதிக்கப்படும் வரி குறித்து ஏற்கனவே குறை கூறியிருந்தார். இந்நிலையில் ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கு இறக்குமதி வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட பின் தொழில் துறையினர் மத்தியில் உரையாற்றிய அவர், இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் குறைந்தபட்ச வரியே விதிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு ஏற்க முடியாதது என விமர்சித்துள்ளார். அமெரிக்காவுக்கு உருக்கு மற்றும் அலுமினிய ஏற்றுமதியில் கனடா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், நாட்டின் உருக்கு மற்றும் அலுமினிய தொழில்துறையை பாதுகாப்பதற்காக, இறக்குமதி கட்டுப்படுத்தப்படும் எனக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீத வரியும் விதிக்கப்படும் எனக் கூறினார். இதற்கு […]
சர்ச்சைக்குரிய கருத்துக்கு பெயர் போனவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இந்நிலையில் அவர் அவரது டுவிட் குறித்து கருத்து ஓன்று தெரிவித்துள்ளார். டுவிட்டர் மூலம் கருத்துக்கள் தெரிவிப்பதையும், கொள்கைகளை அறிவிப்பதையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், உலகில் ஏராளமானோர் தன்னுடைய டுவீட்களைப் படிப்பதற்காக ஏங்கிக் கிடப்பதாகவும், சில நேரங்களில் தான் படுக்கையில் இருந்தவாறே டுவீட் செய்வதாகவும் தெரிவித்தார். அதிபர் தேர்தலின்போது ஊடகங்கள் தனக்கு எதிராகப் பொய்ச்செய்திகளை வெளியிட்ட நேரத்தில், சமூக […]
பல்வேறு கருத்துகளை கூறி சர்ச்சைக்கு பெயர் போன அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் ஒரு கௌரவத்தை வழங்கியுள்ளனர் . பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்ததாகக் கூறி வழங்கப்பட்ட இந்தப் பதக்கம் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நிதியுதவி நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்துவருகிறார். தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதவரை அந்த நாட்டுக்கு உதவ முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. […]
அமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான 66 மாடி குடியிருப்புக் கட்டிடம் உள்ளது. அவர் அதிபராக பொறுப்பேற்று, வெள்ளை மாளிகையில் குடியேறும் முன்னர், டிரம்ப் டவர் எனப்படும் இந்த கட்டிடத்தில்தான் டொனால்ட் டிரம்ப் வசித்து வந்தார். இந்நிலையில், டிரம்ப் டவரின் மாடியில் பொருத்தப்பட்டுள்ள மின்சாதனப் பொருட்களில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 3 பேர் காயமடைந்த நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த […]