கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியின் இறுதிச் சுற்றில், ஐதராபாத் அணியுடன் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி மோதியது. ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் பெங்களூரு அணியும், மற்றொரு ஒற்றையர் ஆட்டத்திலும், பெண்கள் ஒற்றையர் ஆட்டத்திலும் ஐதராபாத் அணியும் வெற்றி பெற்றன. கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் ரான்கி ரெட்டி- பெர்னாடித் ஜோடி வெற்றி பெற்றதன் மூலம் 4-3 என்ற கணக்கில் ஐதராபாத் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.