ஐந்து மாத கர்ப்பிணி சத்தீஷ்கர் மாநில டிஎஸ்பி ஷில்பா கொரோனா ஊரடங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நாடு முழுவதிலும் கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் டிஎஸ்பியாக பணியாற்றக்கூடிய போலீஸ் அதிகாரி ஷில்பா. இவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இருந்தாலும் கொரோனா ஊரடங்கு விதிகளை பின்பற்றுமாறு வாகன சோதனையில் இவர் ஈடுபட்டுள்ளார். கொளுத்தும் […]
குங்குமப்பூ சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்பது காலம் தொட்டு சொல்லிவரகக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் இது உண்மைதானா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். சாஃப்ரான், கேசர், கூங் அல்லது குங்குமப்பூ என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கூடிய இந்தப் பூ சுவைக்காகவும் நிறத்திற்காகவும் பல உணவுகளில் சேர்க்கப்படுவதுடன் மட்டுமல்லாமல் இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பாக குங்குமப்பூ என்றாலே கர்ப்பிணிகள் பயன்படுத்துவது நல்லது என்ற ஒரு எண்ணம் தான் […]
கர்ப்பிணிகளுக்கு கால் வலி ஏற்படுவது சாதாரணமான ஒரு விஷயம் தான். ஆனால் கால் வலியால் அவதிப்பட கூடிய கர்ப்பிணிகள் இயற்கை முறையில் சில உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது அவற்றை சரி செய்யலாம். அவை குறித்து அறியலாம் வாருங்கள். கர்ப்பிணிகளுக்கு… கருவில் வளர தொடங்கக்கூடிய நமது சிசு நமக்கு பாரமாக தெரியப்போவதில்லை. ஆனால் அந்த சிசுவை நாம் சுமப்பதனால் நமது உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் சில நமக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிகள் […]
கடல் உணவாகிய மீன் பிடிக்காதவர்கள் சொற்பமானவர்கள் தான் இருப்பார்கள். சிலருக்கு மீன் மிகவும் பிடிக்கும், இல்லாவிட்டால் உணவே சாப்பிட பிடிக்காது அந்தளவு மீனை விரும்புபவர்களும் உள்ளனர். ஆனால், எதிலும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான். மீனை அளவுடன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அளவுக்கு மீறுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தற்பொழுதைய காலத்தில் அதிகம் இறப்புகள் புற்றுநோயால் தான் வருகிறது. ஆனால், நாம் மீனை அடிக்கடி உணவில் […]
கணவரை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது கார் மோதி 4 மாத கர்ப்பிணி பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியை சேர்ந்தவர்கள் தான் அசாருதீன் – கௌஷிவி தம்பதிகள். நான்கு மாத கர்ப்பிணியான கௌஷிவிக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் மகன் ஒருவன் உள்ளான். துணிக்கடை ஒன்றில் அசாருதீன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கௌஷிவி ஸ்கேன் எடுத்துவிட்டு, அந்த ரிப்போர்ட்டை வேலை பார்த்து கொண்டிருக்கும் தனது கணவரிடம் கட்டுவதற்காக துணிக்கடைக்கு […]
ஆந்திராவில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சிசேரியன் முறையில் மகப்பேறு பார்த்து காப்பாற்றிய மருத்துவர்கள். ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி ஒருவர் மகப்பேறுக்காக வி.எஸ்.ஜி.எச் எனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குமிங்குமாக ஆம்புலன்சில் அலைந்தும் பயனில்லை என்றதால் அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களே அவருக்கு சிசரியன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர். தற்பொழுது வரை தாயும் சேயும் நலமாக உள்ளனராம்.