உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களில் இரண்டு வயது குழந்தையும் அடங்கும். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் ராம்குமார், குசும் தேவி, மனிஷா, சவிதா, மீனாட்சி ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சாக்ஷி எனும் ஐந்து வயது குழந்தையையும் கொலை செய்ய முயற்சித்ததாகவும், ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய உள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. […]