தேர்தல் வேட்புமனு விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யக்கோரி தங்க தமிழ்செல்வன் தொடர்ந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகனும், நாடாளுமன்ற எம்பியுமான ஒ.பி.ரவீந்திரநாத் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அப்போது, அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார் என்றும் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி மிலானி என்பவர் […]