சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. உருவாகவுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு பலவீனமாக இருக்கும் எனவும் தமிழகத்திற்கு இதனால் பாதிப்பு இல்லை எனவும் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்து பதிவு ஒன்றையும் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். […]