பிரதமர் மோடி : பிரதமர் நிதிஷ்குமார் பிரதமர் மோடி காலில் விழுந்தது பிகாருக்கு அவமானம் என பிரசாந்த் கிஷோர் ஆவேசமாக பேசியுள்ளார். பிகாரின் நவாதா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி கால்களில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் விழுந்து வணங்கினார். இந்த சம்பவம் அப்போது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளானது. இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் கடந்த நிலையில், இந்திய அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இது பற்றி […]
இனி காங்கிரஸ் உடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று பீகார் மாநிலம் வைஷாலியில் உள்ள மறைந்த ஆர்ஜேடி தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்கின் இல்லத்தில் இருந்து ஜன் சூரஜ் யாத்திரையை தொடங்கிய பிரசாந்த் கிஷோர், பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றபோது அவர்களுடன் இருந்ததை நினைவு கூர்ந்தார். ஆனால் 2017 உ.பி. காங்கிரஸ் கட்சி.”எனது சாதனையை காங்கிரஸ் கெடுத்து விட்டது, அதனால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன்,தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர் 3-வது முறையாக தற்போது மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்கும் முறைகள் தொடர்பாக இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருபதாக கூறப்படுகிறது. ஏற்கனவே,நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக சோனியா காந்தியிடம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி பிரசாந்த் கிஷோர் விளக்கிய நிலையில்,நேற்றும் சந்திப்பு நிகழந்துள்ளது.இந்த நிலையில்,தற்போது […]
பாஜக அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் பாஜக மையமாக இருக்கும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க காரணமாக இருந்த பிரசாந்த் கிஷோர் கோவா அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பேசியபோது, சுதந்திரம் பெற்ற முதல் 40 ஆண்டுகளில் காங்கிரஸ் எப்படி இருந்ததோ அதேபோல வரவிருக்கும் ஆண்டுகளில் பாஜக இருக்கும். இந்திய அளவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிட்டால் அக்கட்சியை உடனடியாக […]
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு மூத்த தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தலைவர் சோனியா காந்தி விரைவில் முடிவு. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஐ-பேக் என்ற நிறுவனத்தின் மூலமாக பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் வியூகங்கள் வகுத்து கொடுத்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாந்த் கிஷோர் […]
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியை பிரஷாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார். பிரசாந்த் கிஷோர் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு எழுதிய கடிதத்தில், பொது வாழ்கையிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொள்வதாகவும், உங்கள் முதன்மை ஆலோசகராக என்னால் பொறுப்புகளை ஏற்க முடியவில்லை. இந்த பொறுப்பிலிருந்து என்னை தயவுசெய்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்தகட்டம் குறித்து […]
5 முறை போனை மாற்றிவிட்டேன், இருந்தபோதிலும் பயனில்லை ஹேக் செய்வது தொடர்கிறது என அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமத்தில் பெகாசஸ் ஸ்பைவேர் இந்தியர்களை உளவுப் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெகாசஸ் ஸ்பைவேர் இந்தியாவில் பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் இந்தியாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் தொலைபேசி ஹேக் செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹேக் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் பலர் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக […]
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்,தேர்தல் நடத்துவதில் வேண்டாம் என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமாரின் கட்சியில் பிரசாந்த் கிஷோர் துணைத் தலைவராக இருந்து வந்தார்.ஆனால் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதலால் அவர் கட்சியில் இருந்து வெளியே வந்துவிட்டார் . வருகின்ற அக்டோபர் – நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றது. இருப்பினும் […]
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் அன்பழகன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
திருவாரூரில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன அறிவிப்பை வெளியிட போகிறார் என்ற பதட்டத்திலே மு.க.ஸ்டாலின் இருப்பதாக விமர்சித்தார். பின்னர் திமுக கட்சி பிரசாந்த் கிஷோர் தலைமையில் இயங்குகிற கார்ப்பரேட் கட்சி என்றும், அதிமுக மக்களுக்கான கட்சி என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் தேர்தல் வித்தகர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் தற்போது பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். 2012-ல் நரேந்திர மோடியுடன் இணைந்து குஜராத் தேர்தலில் ஜெயிப்பதற்கான யுக்திகளை வகுத்துக்கொடுத்தவர். தமிழகத்தில் இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேர்தலில் ஜெயிப்பதற்காக பல வியூகங்களை வகுத்து கொடுத்து இந்திய தேர்தலில் முக்கிய பங்காற்றியவர் பிரசாந்த் கிஷோர். இவரை தேர்தல் வித்தகர் என பல கட்சி தலைவர்களும் அழைக்கின்றனர். இவர் 2012ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தலில் மோடியுடன் இணைந்து […]