தனது தந்தையால் கூலிப்படை ஏவப்பட்டு சாதி ஆணவத்தால் கணவர் கொல்லப்பட்ட நிலையில் வாடிவரும் அம்ருதாவிற்கு ஆறுதல் கூறும் வகையில், ஆணவக் கொலையில் கணவர் சங்கரைப் பறிகொடுத்து பாதிக்கப்பட்டு, போராடி வரும் கவுசல்யா முகநூலில் ஆறுதல் தெரிவித்துள்ளார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதால் தனது தந்தையே கணவருக்கு எமனாக மாறிய கொடுமைக்கு ஆளானவர் தெலங்கானாவைச் சேர்ந்த அம்ருதா. இந்தியாவை புரட்டிப்போட்ட இந்த சாதி ஆணவக்கொலையை அனைவரும் கண்டித்தனர். அம்ருதா தனது கணவரின் மறைவைக் கண்டு துவண்டுபோய் […]