முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து இந்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சகம். கடந்த சில நாட்களாக முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல் நலக்குறைவால் புது டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு பல்வேறு நாடுகளின் […]
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.வாக்கு என்னும் நாளும் நெருங்கி வருகிறது.கடந்த சில நாட்களாகவே தேர்தல் ஆணையம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது. இந்த நிலையில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக வரக்கூடிய செய்திகள் கவலை அளிக்கின்றன. இதுகுறித்த வதந்திகளுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது கிடைத்ததற்காக பிரணாப் முகர்ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளத்தில் இந்தியாவின் தலைசிறந்த அரசியல் மேதையான பிரணாப் முகர்ஜி, நாட்டுக்காக தன்னலம் இல்லாமல் தன்னுடைய சேவையை செய்துள்ளார் என்று தன்னுடைய வாழ்த்துச்செய்தியில் தமிழக முதல்வர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் கூறுகையில் பிரணாப் முகர்ஜி நீண்ட காலம் […]
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ்.,அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுவது, காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்’ என வலியுறுத்தினர். நான் என்ன பேச வேண்டுமோ, அதை, நாக்பூரில் பேசுவேன் என பிரணாப் முகர்ஜி […]