கோவாவின் துத்சாகர் நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பலத்த மழைக்கு மத்தியில் நீர்வீழ்ச்சியில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து முதல்வர் பிரமோத் சாவந்த் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார், The River Lifesaver rescued around 40 guests stuck at Dudhsagar Waterfall due to turning of crossing bridge […]
கோவா முதல்வராக 2-வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்கிறார். 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டசபைக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வர் பதவியேற்பு விழா: இந்நிலையில்,கோவா முதல்வராக 2-வது முறையாக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்கிறார்.இந்த பதவியேற்பு விழாவானது கோவா பனாஜி அருகே உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கருப்பு முகக்கவசம் அல்லது […]
கோவா முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவாவில் அன்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 20 இடங்களில் பாஜக 20 இடங்களில் வென்ற நிலையில் கோவா முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவா மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில், இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், கோவா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சான்கேலிமில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பல பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இந்நிலையில், […]
இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI), இந்திய அரசின் திரைப்படத்துறையால் கடந்த 1952-ம் ஆண்டு முதன் முறையாக மும்பையில் நடைபெற்றது. அதன் பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் நடந்துள்ளது. சமீபத்தில், 51-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா 2020 தகவல் மற்றும் ஒளிபரப்புக்கான மத்திய அமைச்சகம் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களும் […]