நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார். தொகுதி குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் சொன்னது தமிழ் திரையுலகை அதிர வைத்துள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவாகின்றன. சுவிட்சர்லாந்தில் பாலியல் சம்பவம் நடந்த பிறகு 2014-ல் நடந்த தனது திருமணத்துக்கு வைரமுத்துவை சின்மயி அழைத்து அவர் காலில் விழுந்து ஆசிபெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரிந்து இப்படி காலில் விழலாமா? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். சின்மயியை வைரமுத்து ஓட்டலில் சந்திக்க […]
திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் 25 வருடங்கள் ஆட்சியில் இருந்த இடது முன்னணி அரசை பிஜேபி கூட்டணி வென்றதை அடுத்து அங்கு உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வீடு மற்றும் அலுவலம் ஆகியவையும் கடுமையாக தாக்கப்பட்டன. மேலும் அம்மாநிலத்தில் இருந்த ரஷ்ய புரட்சியாளன், மாமேதை லெனின் சிலை ஜேசிபி கொண்டு உடைக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூரில் திரிபுராமாநில வன்முறையை கண்டித்து இடதுசாரி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்திய திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.மேலும் இங்கு பலர் கலந்து கொண்டனர்.