தெலுங்கில் பேசிய திமுக எம்எல்ஏ! தமிழ் கலந்த தெலுங்கில் கலாய்த்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்!

இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்ற போது தனி தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷ் தனது தொகுதி பிரச்சனை பற்றி கூறுகையில் திடீரென தெலுங்கில் பேச தொடங்கினார். இதனால் அவை தலைவர் குறுக்கிட்டு சட்டமன்றத்தில் மொழிமாற்று கருவி இல்லை ஆதலால் தமிழில் பேச கூறினார்.

ஆனால் மீண்டும் தெலுங்கில் பேச அதிமுகவை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் குறுக்கிட்டு முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒன்பது மொழிகள் தெரியும் ஆனால் எங்களுக்கு ஏதும் தெரியாது. தெலுங்கு தெளிது, தமிழ் செப்பு என கூற சட்டசபை சிரிப்பலையில் அதிர்ந்தது.