பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றதுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இன்று நடைபெற்ற ஆண்கள் உயரம் தாண்டுதல் (T64) போட்டியில் இந்தியா சார்பில் 18வயதான பிரிவின் குமார் பங்கேற்றார். இந்த போட்டியில், பிரவீன்குமார் 2.07 மீ உயரம் தாண்டி 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பாராலிம்பிக்ஸ் போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற பிரவீன் குமார், 2.7மீட்டர் உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையைப் […]