மகாராஷ்டிராவில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு எதற்கு சூரத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிரஃபுல் படேல் கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்டிராவில் பல்கர் மற்றும் பந்தாரா கோன்டியா மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கு தேவையான மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் மகாராஷ்டிராவிலே இருக்கும் போது, எதற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து அவை கொண்டு வரப்பட்டன என்று பிரஃபுல் படேல் கேள்வி எழுப்பி இருக்கிறார். […]