டெல்லி:பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான 10-வது தவணை உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் விடுவித்துள்ளார். பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக ஒரு வருடத்திற்கு ரூ 6,000 வழங்கப்பட்டு வருகிறது.அதாவது,நான்கு மாதத்துக்கு ஒரு முறை ரூ.2,000 என ஒரு வருடத்தில் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.இந்த உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்,இத்திட்டத்தின் மூலம் விவசாயக் […]