Tag: power outage

Sad News: சத்தீஸ்கர் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நான்கு மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டதால் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது நான்கு குழந்தைகளும் மருத்துவக் கல்லூரியின் சிறப்புப் பிறந்த குழந்தை பராமரிப்புப் பிரிவில் (SNCU)  இருந்துள்ளன. இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங்தியோ கூறுகையில்,விசாரணைக் குழுவை அமைக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் தகவல்களை சேகரிக்க அம்பிகாபூர் மருத்துவமனைக்கு செல்கிறேன். ஆய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை உறுதி செய்யப்படும்” […]

#Chhattisgarh 2 Min Read
Default Image

Breaking:பெரும் சோகம் – தேர் திருவிழாவில் 11 பேர் பரிதாபமாக பலி!

தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக களிமேடு அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,நேற்று நள்ளிரவு நடைபெற்ற களிமேடு தேர் திருவிழாவில் தஞ்சை பூதலூர் சாலையில் களிமேடு பகுதியில் தேர் வரும்போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதால் மின்சாரம் […]

#Electricity 3 Min Read
Default Image

மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த 14 பேர் – 3 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவு!

மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரையிலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி அவர்கள் 14 பேரின் குடும்பத்துக்கும் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை சேர்ந்த பகவதி நாடார் என்பவரின் மகன் ராமையா, அகத்தீஸ்வரர் திருநந்தகுமார் என்பவர், […]

#ADMK 4 Min Read
Default Image

மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் – ஆட்சியர் விளக்கம்!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடையால் ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டு இரண்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கொரோனா மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரக்கூடிய திருப்பூர் அரசு மருத்துவமனையில் இன்று 3 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. அதன் காரணமாக நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் தடைபட்டதால், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் விளக்கம் கேட்டபோது இருவரும் உடல்நல பாதிப்பு காரணமாகவே உயிரிழந்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் […]

hospital 4 Min Read
Default Image