TANCET தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) 2023-க்கான தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, M.E, M.B.A, M.TECH, M.ARCH, M.PLAN ஆகிய படிப்புகளுக்கான TANCET -2023 தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. TANCET -2023 தேர்வு பிப்ரவரி 25, 26-ல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டான்செட் தேர்வுக்கான புதிய தேதி tancet.annauniv.edu என்ற […]
அக்.1-ம் தேதி தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தஹள்ளிவாய்ப்பு என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு, அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ் மொழி திறனறித் தேர்வுக்கு தமிழ் தெரிந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் […]
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலை தேர்வு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு. ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப் 1 முதல்நிலை தேர்வு அக்டோபர் 30-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு நவ.19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டம். ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நீட் முடிவுக்கு பின் பல மாணவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறலாம் என்பதால் கலந்தாய்வு தள்ளி போகிறது. எனவே, விரைவில் […]
பாக்.பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் யாரும் வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றம் வரவில்லை என தகவல். பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில்,இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் யாரும் வாக்கெடுப்புக்கு நாடாளுமன்றம் வரவில்லை என்றும்,இதனால்,வாக்கெடுப்பு அடுத்த வாரத்துக்கு தள்ளி போகலாம் என்றும் பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் க்பவத் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார்.இதனைத் […]
ஓமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் ஒத்திவைப்பு. ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. துபாய் எக்ஸ்போவில் (கண்காட்சி) பங்கேற்பதற்காக ஜனவரி 6-ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்லவிருந்த நிலையில், தற்போது பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளதாவது: கொரோனா பரவல் காரணமாக நவம்பர் மாதம் நடக்க இருந்த கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவானது அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கபடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் அவர் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். இந்நிலையில் கோல்கத்தா சர்வதேச […]
மனோஜ் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிறையிலுள்ள சயான், மனோஜ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய 4 சாட்சிகளை மிரட்டியுள்ளதால், ஜாமீன் தந்தால் மற்ற சாட்சிகளையும் மிரட்டக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நீலகிரி நீதிமன்றத்தில் விசாரணை துரிதமாக […]
ஆஸ்கர் விருது வழங்கும் விழா 4- வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. உலக சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 93 -ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகின்ற 2021 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 25 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 1981 […]
13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றும்போது மேலும் 19 நாட்கள் அதாவது மேல் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவித்தார் . இதனால் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 3-ம் தேதி பின்னர் நடத்தப்படும் என […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவிருந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போதைக்கு திட்டம் சத்தியமில்லை என திருவாரூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இதனிடையே ஏற்கனவே ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், வரும் 1 ம் தேதி […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144 தடை) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு, அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 3 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
வரும் 26ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 தேர்வு ஒத்திவைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை நடைபெற இருந்த பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து கல்லூரி மற்றும் வேலைவாய்ப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் இதுவாரை 9 பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகம், திரையரங்குங்கள் என ஏற்கனவே […]
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவை வருகின்ற 31-ம் தேதியுடன் முடிவடைகிறது என சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை வருகின்ற ஏப்ரல் 09-ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தற்போது 31-ம் தேதியுடன் முடிவடைகிறது .31-ம் தேதி அன்று காலை ,மாலை சட்டசபை நடைபெறும் என சென்னையில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி.எப் -10 ராக்கெட் ஜிஐ சாட்-1 என்ற செயற்கைக்கோளை ஏந்தி நாளை மாலை 05.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட இருந்த நிலையில் தொழில்நுட்ப காரணங்களால் ஜி.எஸ்.எல்.வி.எப் -10 ராக்கெட் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு இஸ்ரோ விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-2 செயற்கைக்கோள் ஏவுவதற்கு முன் தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் வருகின்ற ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த கோரி மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவை காலை துவங்கியதும் கேள்வி நேரம் துவங்குவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி முழக்கங்களை எழுப்பினர்.இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. பின்னர் மக்களவை நண்பகல் […]