மீண்டும் தபால் வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு மீது 30ம் தேதிக்குள் பதில் அளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் தபால் வாக்கு முறைகேடு என்றும் மீண்டும் தபால் வாக்குப்பதிவு நடத்தக்கோரி திமுக வேட்பாளர் ஆஸ்டின் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். அந்த வழக்கு மீதான விசாரணை இன்று வந்தபோது, கன்னியாகுமரி தொகுதியில் முதியோருக்கான தபால் வாக்குப்பதிவில் ரகசியத்தன்மை இல்லை என திமுக வேட்பாளர் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளரின் மனு மீது 30-ம் தேதிக்குள் […]
எந்த சூழலிலும் தபால் வாக்கு பெட்டிகளை மே 1ம் தேதி திறக்கக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக சார்பில் தேர்தல் அதிகாரியிடம் மனு. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சார்பில் மனு அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ம் தேதி தான் தபால் வாக்குகள் எண்ணப்படவேண்டும் என்றும் அதற்கு முன்பாக மே 1ம் தேதி எந்த சூழலிலும் ஸ்டார்ங் ரூம் திறக்க கூடாது […]
தேர்தல் ஆணையம் நடைமுறையை எதிர்த்து திமுக தொடர்ந்துள்ள அவசர வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனிகளும் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தபால் மூலம் வாக்களிப்போரின் பட்டியலை தொகுதிவாரியாக வழங்கக்கோரி திமுக முதன்மை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தொகுதி வாரியாக தபால் […]
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு. தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்கும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் அறிவித்தது. விருப்பப்படுவர்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு ஒன்று […]
மக்களவை தேர்தலில் சரியான விவரங்களை அளிக்காததால் 12,915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.அதில்,மக்களவை தேர்தலில் சரியான விவரங்களை அளிக்காததால் 12,915பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினருக்கு 4,35,003 பேருக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.அதில் 4,10,200 பேர் வாக்களித்தனர்.அதில் 3,97,291 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தது. இதன் பின் […]