தமிழில் தபால்துறை தேர்வுகள் என்ற அறிவிப்பு இந்த ஆண்டுக்கு மட்டுமா? இல்லை வரும் ஆண்டுகளுக்கும் பொருந்துமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டு உள்ளது. மேலும் திமுக எம் எல் .ஏ எழிலரசன் தொடர்ந்த வழக்கிற்கு ஜூலை 23-ம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டு உள்ளது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி அஞ்சல் துறை தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பின்னர் அறிவிப்பு ஒன்றைவெளியிட்டார். […]
அஞ்சல் துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள். இந்த நிலையில் அஞ்சல் துறை தேர்வு ஜூலை 14 ஆம் தேதி நடைபெற்றது.ஆனால் மாநிலங்களவையில் அஞ்சல் துறை தேர்வு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக – திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர் .அமளி காரணமாக இன்று அவை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் […]