ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து என மத்தியஅரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்து கொள்வதாக அறிவித்தது. மேலும் தங்கள் நாட்டு தூதரை திரும்ப அழைத்து கொண்டு இந்திய தூதரை திரும்ப அனுப்பியது.இந்தியா -பாகிஸ்தான் இடையே இயங்கி வந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையையும் பாகிஸ்தான் நிறுத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியாவுடனான தபால் சேவையும் நிறுத்தி கொள்வதாக பாகிஸ்தான் அக்டோபர் மாதம் அறிவித்தது.இதனால் மத்திய […]