மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தின் விபரம் கீழே தெரவிக்கப்பட்டுள்ளது. தபால் ஆய்வாளர் பணிக்கான தேர்வில் தமிழ் பாடம் இணைக்கப்பட வேண்டும் என்று கூறி மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “தபால் துறையின் வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சினையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.அதாவது,தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு […]