மூன்று வயது சிறுமி இரண்டு மைனர் சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, அதன்பின்னர் இருவருக்கும் எதிராக ஐபிசி பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். “இரண்டு மைனர் சிறுவர்களால் தனது மூன்று வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் தாய் புகார் கொடுத்ததை தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.