பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியாக (70 மில்லியன்) அதிகரித்துள்ளது. உலகளவில் அரசியலில் தற்போது உள்ள தலைவர்களில் அதிகமாக பின்தொடர்வோர் எண்ணிக்கையில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் சமூகவலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் கணக்கை தொடங்கிய பிரதமர் மோடி, சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்படும் தலைவரானார். இதன்பின் படிப்படியாக அவரை ட்விட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமரை பின்தொடர்வோர் […]
அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வாடிகன் வந்தடைந்தார் போப் ஆண்டவர் பிரான்சிஸ். போப் பிரான்சிஸ் அவர்களுக்கு, பெருங்குடலில் அறிகுறி டைவர்டிகுலர் ஸ்டெனோசிஸ் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், இந்த அறுவை சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த பாப் ஆண்டவர் பிரான்சிஸ் […]
மதகுரு மற்றும் பாதிரியார்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவது உண்மைதான் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் சென்றுள்ள போப் பிரான்சிஸ், அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த போப் பிரான்சிஸ் திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடைபெறுவது உண்மைதான் என்றார். மேலும் அவர் கூறுகையில் , சில மதகுருமார்கள் , பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குக்கின்றனர். இப்படி குற்றச் செயல்களை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.