ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முதல் நுழைவுவாயில் முன்பு கருக்கா வினோத் பெட்ரோல் பாட்டிலை பற்றவைத்து வீசினார். இதை பார்த்த சென்னை மாநகர் காவல்துறையினர் கருக்கா வினோத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது வெடிபொருள் தடுப்பு […]