சென்னை: கனமழை காரணமாக பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 35 அடி கொண்ட ஏரியில் தற்போது 34.05 அடி நீர் உள்ளது. இதனால், மதியம் 1.30 மணிக்கு விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. […]