கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் இன்று தமிழ்நாட்டிற்கு 7-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னையில் நடைபெற்றுவரும் கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கணையர்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். அதன்படி, ஐந்தாம் நாளாக இன்று சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில், தமிழ்நாடு வீராங்கனை பூஜா […]