தமிழ் சினிமாவில் இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் பூ ராமு. இந்த படத்தை தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று போன்ற பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் பூ ராமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் பூ […]