அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என அமைப்பு செயலாளர் பொன்னையன் பேட்டி. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், வைகை செல்வன், ஆர்.பி.உதயகுமார், செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொன்னையன், அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து கட்சியின் தலைமை […]
திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களை மறைக்கவே அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு என்று இபிஎஸ் குற்றசாட்டு. சேலம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம், ஓமலூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த 100 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு. திமுக ஆட்சியில் நடந்த […]
பாஜக குறித்து அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியது அவரது சொந்த கருத்து என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி. சென்னை ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஓபிஎஸ், கடந்த 29 மற்றும் 30-ஆம் தேதி நடைபெற்ற அம்மா பேரவையின் திறன் மேம்பாட்டு கூட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவிற்கு நல்லதல்ல என்று பேசிய கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் […]
தமிழகத்தில் இந்தியை திணிக்க வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை என அதிமுக அமைப்புச் செயலாளர் கருத்து. சென்னை அண்ணா நகரில் செய்தியாளரிடம் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளரும், மூத்த நிர்வாகியுமான பொன்னையன், பாஜக நட்பு கட்சி தான். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என கூறிய அவர், தமிழகத்தில் இந்தியை திணிப்பதில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது என குற்றசாட்டினார். தமிழக பாஜக மாநில உரிமைக்காக போராடவில்லை என்பது நாடறிந்த உண்மை. இந்தி திணிப்பை […]
பாஜகவின் இரட்டை வேடத்தை அதிமுகவின் ஐ.டி.அணி சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்த வேண்டும் என்று பொன்னையன் வலியுறுத்தல். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பேரவை நிர்வாகிகளுக்கு செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் பயிற்சியின் 2ம் நாளான நேற்று கலந்துகொண்டு பேசிய அதிமுக அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் மூத்த நிர்வாகியுமான பொன்னையன், அதிமுகவின் இடத்தை பாஜக நிரப்புகிறது. பாஜக, அதிமுகவின் கூட்டணி கட்சி தான் என்றாலும் கூட அக்கட்சி தமிழகத்தில் வளர்வது […]
தாய் மொழியே இல்லாவிட்டாலும், இந்தி திணிப்பில் மத்திய அரசுக்கு வெறி உள்ளது என அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், முதல்வரின் தாயாருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தை இந்தியில் அவர் அனுப்பியுள்ளார், இது சர்ச்சைக்குள்ளாகியது. இந்நிலையில் இது […]
தமிழ்நாடு திட்டக்குழு துணைத்தலைவராக பொன்னையன் பதவியேற்றார். மாநில திட்டக் குழு முதலமைச்சர் தலைமையில் இயங்கி வருகிறது. இந்த குழு ஆண்டு திட்டங்கள், ஐந்தாண்டு திட்டங்கள் ஆகியவற்றை தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மாநில திட்டக்குழுத் துணைத் தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு திட்டக்குழு துணைத்தலைவராக பொன்னையன் பதவியேற்றார்.முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முன்னிலையில் பதவியேற்றார் பொன்னையன்.
மாநில திட்டக்குழுத் துணைத்தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில திட்டக் குழு முதலமைச்சர் தலைமையில் இயங்கி வருகிறது. இந்த குழு ஆண்டு திட்டங்கள், ஐந்தாண்டு திட்டங்கள் ஆகியவற்றை தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.இந்நிலையில் மாநில திட்டக்குழுத் துணைத் தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
‘தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் நேர்மையானவர்’ என்று அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் பொன்னையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக ஆட்சியில் நடைபெறும் ஆன்லைன் டென்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக ஆர்.டி.ஜி.எஸ்.முறையில் பணம் செலுத்தும் ஆன்லைன் டென்டர் ஒப்பந்த முறையை முதலமைச்சர் அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார். ஒட்டன்சத்திரம் – அவிநாசி சாலைக்கான டென்டர் முறை ஆன்லைன் வழியாகவே நடைபெற்றதாகவும் […]