பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் பணம் விநியோகம் தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு. பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பை உரிய முறையில் விநியோகம் செய்ய வேண்டிய பொறுப்பும் ஆட்சியர்களே சாரும். ஜனவரி 9-ஆம் தேதிக்கு பின் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்க […]
பொங்கல் பரிசு தொகுப்பு மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என அரசு தகவல். தமிழ்நாட்டில் ஜனவரி 13-ஆம் தேதி நியாயவிலை கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பு என்றும் எக்காரணம் கொண்டும் தகுதியான பயனாளிக்களுக்கு பொங்கல் பரிசு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் […]
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பொங்கல் பரிசை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.470 மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இலவச அரிசிக்கான பணம், சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,400, மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரூ.1,200 வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் பொங்கலுக்குள் நடைமுறைக்கு வரும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு. பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினனாரின் கோரிக்கையை ஏற்று, கரும்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார். ஆனால், கரும்பை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மேலும் […]
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் நன்றி. பொங்கல் பரிசு தொகுப்புகள் டோக்கன் வழங்கும் பணி ஜனவரி 3-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 3-ஆம் தேதி முதல் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. […]
அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொங்கல் பாரிஸில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்திருந்ததையடுத்து பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து அதிமுக சார்பில் ஜனவரி 2-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த […]
பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சக்கரை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதில் கரும்பு இடம்பெறவில்லை. இதனால், பொங்கல் பாரிஸில் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்திருந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என […]
பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க கோரிக்கை எழுந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்த்து வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்ரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ […]
தமிழக அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வழக்கை விசாரணையை திங்கட்கிழமை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம். பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க உத்தரவிட கோரிய வழக்கு ஜனவரி 2-ஆம் தேதி திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. கடலூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது. அரசு கொள்முதல் செய்யாததால் குறைந்த விலைக்கு கரும்புகளை விற்க […]
இன்று முதல் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த வருடம் பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், இலங்கை மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை உடன் 1000 ரூபாய் பொங்கல் பரிசும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, […]
தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும் என ராமதாஸ் எச்சரிக்கை. பரிசுத் தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தமிழர் திருநாளையொட்டி, அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசு அளிக்கவிருக்கும் பரிசுத் தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. கரும்பு உழவர்கள் நலனை கடுமையாக பாதிக்கும். தமிழ்நாட்டில் கடந்த சில […]
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியீடு. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு […]
பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் ரொக்கப்பணம் வழங்குவது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல். கடந்த பொங்கலின்போது நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும், இந்த பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதன் காரணமாக இந்த முறை ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. அந்தவகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பை […]
இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல். சென்னை அண்ணா சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பொங்கலுக்கு முன் 50000 விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். இதுவரை 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 15,866 விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன் மின் இணைப்புகள் முழுமையாக வழங்கப்பட்டு விடும் என்றும் ஒன்றரை ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்பு நிறைவு […]
பொங்கலுக்கு ரூ.1,000 மற்றும் சில பொருட்கள் வழங்கலாமா? என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பை வழங்குவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு பங்கேற்றுள்ளனர். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவது குறித்தும், பொங்கலுக்கு ரேஷனில் 1,000 ரூபாயுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது […]
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், ரூ.3000 ரொக்கமாக வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழக மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், 2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக, கடந்த 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப […]
பொங்கல் ரொக்கப் பணம் ரூ.1000 நியாயவிலைக் கடைகளில் கொடுக்க ஏற்பாடு என தமிழக அரசு தகவல். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்து ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், திமுக அரசு வழங்கிய […]
பொங்கல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதே போல இந்தாண்டும் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தபட்டு வருகிறது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கதர்துறை அமைச்சர் காந்தி, […]
2023ம் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதில் ரூ.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படலாம் என தகவல். 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூ.1,297 கோடிக்கு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும், இதில் பல்வேறு முறைகேடு நடத்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டை முன்வைத்தனர். இந்த நிலையில், 2023ம் ஆண்டு […]