புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்குவது வழக்கம். அதே போல இந்தாண்டும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம் பெற்ற பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு. […]