திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம, நாளை மறுநாள் (ஜனவரி 15) மாட்டு பொங்கல், ஜனவரி 16 காணும் பொங்கல் ஆகிய தினங்கள் மட்டுமின்றி ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அளித்து ஒருவார காலம் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தைப் போல, அண்டை மாநில எல்லையோர பகுதிகளிலும் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அங்கும் உள்ளூர் விடுமுறை விடுவது […]
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்திற்கும், உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (ஜன. 13ஆம் தேதி) பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இந்த 2 மாவட்டங்களுக்கு மட்டும் ஒருநாள் கூடுதல் விடுமுறை வருகிறது. இதன் மூலம், கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மட்டும் மொத்தம் […]
மாண்டஸ் புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தமிழக சட்டப்பேரவை பொங்கல் விடுமுறை கழித்து தான் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையானது ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி முதல் வாரம் தொடங்கும். அதன் பிறகு பொங்கல் விடுமுறை விடப்படுவது வழக்கம் . ஆனால் வரும் 2023வது வருடம் இதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பொங்கல் விடுமுறை கழித்து தான் 2023இன் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மாண்டஸ் புயலினால் […]
பொங்கல் விடுமுறைக்கு பின் எடுக்கப்படும் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்பொழுது, மக்கள் காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கை கடைப்பிடித்து பெரிய வெற்றியைத் தந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் […]