இணையத்தில் ஆன்லைன் பதிவு தொடங்காததால் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஏமாற்றம். மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. madurai.nic.in என்ற இணையதளத்தில் ஜல்லிக்கட்டு முன்பதிவுக்கான லிங்க் இணைக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மாடுபிடி வீரர்கள், காளைகளை முன்பதிவு செய்ய லிங்க் இணைக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு குழுவினர் அதிருப்திக்கு உள்ளனர். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கு இன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இணையத்தில் ஆன்லைன் […]
திட்டமிட்டப்படி நாளை முதல் ஜன.13-ம் தேதி பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் […]
அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல். மக்கள் அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு பொருட்கள் கிடைப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அமைச்சர்கள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், இந்த பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவதை நானே நேரடியாக […]
பொங்கல் தொகுப்பில் ஏதேனும் தவறு அல்லது முறைகேடு குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்ணை வெளியிட்ட அமைச்சர் சக்கரபாணி. தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் […]
தமிழகத்தில் பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பார்வையாளர்களின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு நடைபெற்று வரும் நிலையில், தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. […]
புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு. 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு […]
விவசாயிகளிடம் நேரடி கரும்பு கொள்முதல் செய்வதற்கான முக்கிய விதிகளை வெளியிட்டது கூட்டுறவுத்துறை. கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புடன், கரும்பும் சேர்த்து வழங்க தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கரும்பு […]
21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் பொங்கல் சிறப்பு தொகுத்து வழங்கப்பட உள்ளன. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராச்சை, ஏலக்காய், நெய், கரும்பு போன்ற […]
பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை கண்காணிக்க கூடுதல் பதிவாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு. 2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்க அரசு […]
மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றியிருந்த ரொக்கத் தொகை என்ற வார்த்தை நீக்கம். 2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது. பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்க அரசு உத்தரவிட்டதை […]
பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்க தொகை வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என கூட்டுறவு சங்களின் பதிவாளர் சுற்றறிக்கை. 2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 21 பொருட்கள் […]