நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்கள் “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு” என தனது பதிவிட்டு ட்விட்டரின் மூலமாக பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு. — Kamal Haasan (@ikamalhaasan) January 13, 2018
காற்றின் தரம் குறித்து சென்னையின் 15 இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தியாகராயநகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகையை முன்னிட்டு தென் சென்னையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10 மணிநேரம் வரை புகைமூட்டம் நீடிக்கும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று அதிகாலையில் போகி பண்டிகையையொட்டி சென்னையில் விமானங்கள் ரத்தானது .அதேபோல் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளனார்கள் […]
போகி பண்டிகையையொட்டி சென்னையில் பொதுமக்கள் அதிகாலையளவில் அதிக அளவிலான பழைய பொருட்களை எரித்ததால் விமான நிலையத்தின் ஓடுபாதை முழுவதும் புகைமண்டலமாக சூழ்ந்துள்ளது. இதனால்,சென்னை விமானநிலையத்தில் 12 விமானங்கள் தரையிரங்க முடியாமல் பெங்களூரு உள்ளிட்ட 4 இடங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன.மேலும் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் விழாவின் தொடக்கமான போகி பண்டிகையையொட்டி, அதிகாலையிலேயே எழுந்து மக்கள் தங்கள் வீட்டில்உள்ள பழைய பொருட்களை கொளுத்தி கொண்டாடி வருகின்றனர். இதனால் சென்னையில் பனியோடு புகைசூழ்ந்து காணப்படுகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்வதுகூட தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளது
திண்டுக்கல் : பழனி அருகே பெரியகலையம்புத்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை. கட்டுபாடுகளை விதித்து வரும் 16 ம்தேதி நடத்த மாவட்ட ஆட்சியர் வீனய் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பொருட்கள் விநியோக்கிக்கப்படும் எனவும்,இந்த பொங்கல் பொருள்களில் 250 மதிப்புள்ள பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 5 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை வழங்கப்படும் என புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் காவல்துறையினர் இடையேயான விளையாட்டு போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழகம் முழுவதும் 1 கோடி 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் பழனிசாமி இன்று துவங்கி வைத்தார். 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடிநீளக் கரும்புத்துண்டு ஆகியவை இந்த பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றவர்கள் அனைவருக்கும் இனிய […]
தீபாவளி தினத்தன்று தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்த திரைப்படம் ‘மெர்சல்’. இப்படம் சுமார் 255 கோடி வசூல் செய்திருந்தது. இப்படத்தின் 100 வது நாளை கொண்டாட இருந்த ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இப்படம் வெளியாகி சில மாதங்களே ஆகிய நிலையில் தொலைகாட்சியில் பொங்கலன்று வெளியாக உள்ளது. இது 100வது நாளை கொண்டாட இருந்த விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. source : dinasuvadu.com