தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100% கட்டணம் இலவசம் என்றும் புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.காம்.,எம்.பி.ஏ உள்ளிட்ட (B.A,M.A,BBA, MBA) படிப்புகளில் சேர மாணவர்களிடம் இருந்து புதுவைப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. அதன்படி, https://dde.pondiuni.edu.in/notifications/admissions-2021-22-apply-online/ என்ற இணையதளத்தில் டிசம்பர் 15 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும்,அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100% கட்டணம் இலவசம் என்றும் புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதைப்போல,3 ஆம் பாலினத்தவர்கள்,கணவனை இழந்தவர்கள், கைதிகள், ராணுவத்தினர், […]
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து என புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டு மதிப்பெண் (internal) அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.