கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட செல்போன்.! தண்டனை கைதிகளிடன் தில்லாலங்கடி வேலை.!

தண்டனை கைதிகளின் அறையில் உள்ள கழிவறை மற்றும் மின்விசிறிகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் செல்போன் சார்ஜர் ஆகியவை கிடைத்துள்ளது.

சிறையில் கைதிகளின் அறையிலும், கைதிகளிடமும் அவ்வப்போது சோதனை நடத்தி ஏதேனும் முறைகேடாக விதிகளை மீறி கொண்டுவரப்பட்டதா என சோதனை செய்வது வழக்கம். 

அப்படி, புதுசேரி, காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் சோதனை நடைபெற்றது. அப்போது தண்டனை கைதிகளிடமும், அவர்களின் அறையிலும் சோதனை நடைபெற்றது.

அவர்களின் அறையில் உள்ள கழிவறை மற்றும் மின்விசிறிகளில மறைத்துவைக்கப்பட்ட செல்போன் மற்றும் செல்போன் சார்ஜர் ஆகியவை கிடைத்துள்ளது. இதனை பறிமுதல் செய்த சிறைக்காவல்துறையினர் அவை எவ்வாறு உள்ளே கொண்டுவரப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.