புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால் கலவரம் ஏற்பட்டது. அவதூறு வாட்ஸ்அப் ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடந்தது. போராட்டத்தின்போது பொன்னமராவதி காவல்நிலையம், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டது. இந்நிலையில் பொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக 30 பேரை அதிரடியாக நள்ளிரவில் கைது செய்தது காவல்துறை.பொன்னமராவதி ஆடியோ விவகாரத்தில் கடைகள் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் 30 பேர் கைது […]