இந்திய அரசியலமைப்பின் சிற்பி அண்ணல் அம்பேத்கருக்கு பிரமாண்ட சிலை. பல கோடி செலவில் அமைக்கிறது மகாராஷ்டிர அரசு. மகாராஷ்டிர மாநிலத்தில் 350 அடி உயரத்தில் தற்கால மனு, அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இந்த சிலையானது தாதர் பகுதியிலுள்ள இந்து மில்ஸின் 12 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த அம்பேத்காரின் சிலையானது 250 அடி உயரத்தில் அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், […]
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற, பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவு துறை அமைச்சர் அதிரடியான பல கருத்துக்களை முன்வைத்தார். இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கிய அமைச்சர் ஜெய்சங்கர். அவர் இவ்விழாவில் பேசியதாவது, இந்தியா, சர்வதேச பிரச்னைகளில் வணிக ஆதாயம் உள்ளதா இல்லையா என ஆராய்ந்து, அதற்கேற்ப தன் முடிவுகளை எடுக்காது. அதுபோல, எந்த விவகாரமாக இருந்தாலும் அதில் தலையிட்டு இடையூறு விளைவிக்காது. அதே நேரத்தில், பிரச்னைகளை தள்ளி நின்று என்றுமே வேடிக்கையும் பார்க்காது. அவற்றுக்கு தீர்வு காண […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு, திமுக உறுப்பினர்களை அதிமுகவிற்குத் தாரைவார்த்துக் கொடுத்த திமுக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு நன்றி. இதுபோன்ற கழகப் பணிகள் தொடர திமுக தொண்டர்கள் சார்பில் நன்றி! நன்றி! நன்றி என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தப்பொருத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 22 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் திராவிட முண்ணேற்ற கழகம் 11 இடங்களையும், அண்ணா திராவிட முண்ணேற்ற கழகம் 8 இடங்களையும், காங்கிரஸ் , […]
மகாராஷ்டிரா அரசு சிவ போஜனம் என்ற பெயரில் புதிய திட்டம். பொதுமக்கள் மகிழ்வுடன் எதிர்பார்ப்பு. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மலிவு விலையில் உணவுகளை வழங்க ‘அம்மா உணவகம்’ தொடங்கப்பட்டது, மக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆந்திராவில் ‘அண்ணா கேண்டீன்’ தொடங்கப்பட்டது. இதேபோல், மகாராஷ்டிராவில் புதியதாக பொறுப்பேற்றுள்ள சிவசேனா காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களுக்கு மலிவு விலையில் மதிய சாப்பாட்டை வழங்கக்கூடிய ‘சிவபோஜன்’ எனும் உணவுத் திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. இத்திட்டம் […]
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இடையே அவ்வபோது உரசல்களிருந்த போதிலும் வெளியே காட்டிக்கொள்வதில்லை. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. தற்போது இருகட்சியினரும் மாறி மாறி குற்றசாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அறிக்கை மேலும் புகைச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச்சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.மேலும் கூறிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டே கிடையாது எனவும், அதனால் […]
காவல் துறை உதவி ஆய்வாளர் வில்சனை குத்தியும் சுட்டும் கொன்ற கொடூரர்கள் கைது. இவர்களுக்கு அளிக்கும் தண்டனை தவறு செய்பவர்களுக்கு சுருக்கு கயிறாக அமைய வேண்டும் என பொதுமக்கள் கருத்து. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் துறை உதவி ஆய்வாளர் வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் என்ற இரு கொடூரர்கள் கடந்த 8- ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள். இது தொடர்பான […]
தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி பல ஆண்டுகளாக தீவிரவாதிகளுடன் தொடர்பு. இந்த டி.எஸ்.பி குறித்து அப்சல் குரு பல ஆண்டுக்கு முன்பே கூறியது உண்மையானது கடந்த சனிக்கிழமை 11ம் தேதி காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் காவல் துறையினரின் வாகன சோதனையில் ஒரு கார் நிற்காமல் சென்றது. அந்த காரை போலீஸார் விரட்டிச் சென்று ஜம்முவின் மிர் பஜார் பகுதியில் வைத்து பிடித்தனர். அந்த காரை காவல்துறை டிஎஸ்பி தாவிந்தர் சிங் ஓட்டிச் சென்றதும் அவருடன் […]
அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி குரித்த வழக்கு. நீதிபதி கண்காணிப்பில் நடைபெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமுகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் படி இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடந்து வருகிறது.இந்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் […]
ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல். தாக்குதலின் போது சிவப்பு சட்டை அணிந்து கொண்டு மாணவர்களை தாக்கிய பெண் யார் என்று அடையாளம் க கண்டுபிடித்துள்ளது டெல்லி காவல் துறை. டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைகழகத்தில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து கொடூரத்தையே நிகழ்த்தினார்கள். மாணவர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் […]
தமிழகம் தற்போது நாகரீக வளர்ச்சியில் சிறந்த நிலையை அடைந்து வருகிறது. இதில் சகித்துக்கொள்ள முடியாத பல சம்பவங்களும் அடங்கும். இதேபோல் ஒரு சம்பவம் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான கலை கல்லூரியிலும் நிகழ்ந்துள்லது. இந்த மாணவிகள் தங்கள் சக மாணவனுடன் இணைந்து மது அருந்துவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட மூன்று மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் என நான்கு […]
சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் தற்போது அதிரடியாக கருத்தை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பெரிய அகழியையே ஏற்படுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்து. அவர்கள் கூறியதாவது: திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த போது, ‘நீங்கள் தேசிய கட்சி தானே வேண்டுமானால்,நீங்கள் தனித்தே போட்டியிடலாமே’ என, தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் ஏளனமாக பேசினார். நாங்கள் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டோம். உள்ளாட்சி தேர்தலில் இட […]
பசியால் தவித்த பெற்ற குழந்தைகளின் பசியை போக்க தனது தலைமுடியை மொட்டை அடித்து விற்று உணவளித்த மற்றும் தற்கொலைக்கு முயன்ற பாசமிகுந்த தாய். இது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தனது அறிககையை வீரைவில் தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் வீமனூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிரார். கடன்தொல்லை காரணமாக இந்த பெண்ணின் கணவர் செல்வம் ஏற்கனவே தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதனால் அவர் வாங்கிய […]
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று அதாவது ஜனவரி 14ல், சோவின் துக்ளக் இதழின் 50 ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது, துக்ளக் இதழின் சிறப்பு மலரை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட, ரஜினிகாந்த் அதை பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், மக்களுக்கு சேவை செய்வது […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் என முதலில் 40 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்கும் என அரசியல் ஆர்வளர்கள் அச்சம். இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தர பிரதேசம் மாநிலம் தற்போது உருவெடுத்துள்ளது. இதன்படி உத்தர பிரதேசத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகள் 40 ஆயிரம் பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 6 இந்துக்கள் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடி சீக்கியர்கள் […]
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்த ஆலோசனை கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் ராகுல்காந்தி கூறிய கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட 20 கட்சிகளை சேர்ந்த […]
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டு விழாவில் பாரத பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். இதில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் 2-வது நாளாக இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன. எனினும் இந்த துறைமுக ஆண்டு விழாவில் நேற்று பிரதமர் மோடியுடன் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். இந்த மம்தாவின் பங்கேற்ப்பால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே, பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளை மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக […]
தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு தமிழ் மக்களும் சிறப்போடு கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணி தற்போது நிறைவை எட்டியுள்ளதாக அமைச்சர் தகவல். இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் […]
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங், காலிஸ்தான் தீவிரவாதி ரஜோனாவால் கொள்ளப்பட்டார். இதனால் இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சிரோமணி அகாலி தளம் தலைவர்கள் இன்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். சீக்கியர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கோரி காலிஸ்தான் என்ற அமைப்பு 1995-ல் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த்சிங்கை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் கொடூரமாக படுகொலை செய்தது. இதற்காக தீவிரவாதி […]
உதவி ஆய்வாளர் வில்சன் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டதற்க்கு கண்டனம் தெரிவிக்காத திமுக,காங்கிரஸ். இவர்கள் கூட்டணியில் பயங்கரவாதிகளும் உள்ளனர் போலும் என்று சாட்டையடி விமர்சனம். கன்னியாகுமரி மாவட்த்தில் உதவிஆய்வாளர் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே அதிச்சிக்குள்ளாகியது. இது குறித்து கருத்து கூறிய முன்னால் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் அவ்ர்களின் குடும்பத்திற்க்கு 1 கோடி ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என்ற தமிழக […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம். தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவரிடம், விசாரணை நடத்த, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனுாரைச் சேர்ந்தவர் திருவராஜ், இவரது வயது 46, இவர் அப்பகுதியில் ஆடுகள் மேய்த்து வருகிறார். இவர் 2012ம் ஆண்டில் இருந்து,இதுவரை ஏழு முறை, குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த முறை நடந்த, கிராம நிர்வாக அலுவலருக்கான […]