காற்று மாசுபாட்டைத் தடுக்கவும், எதிர்த்துப் போராடவும் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்று மாசு அதிகரித்துள்ளது. நேற்று (வியாழன்) 460 ஆக இருந்த டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI), தற்போது 376 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் குறைக்க டீசல் பேருந்துகள், லாரிகள், மற்ற மாநில டாக்சிகள் ஆகியவை நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக தினசரி […]
கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை என மாநகராட்சி எச்சரிக்கை. கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பராமரிக்கப்படும் 3 இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலை, மாலை என இரு வேளைகளில் […]
உலகில் காற்றுமாசு அதிகம் உள்ள நாடாக பங்களாதேஷும், காற்றுமாசு அதிகம் உள்ள தலைநகரங்களின் பட்டியலில் டெல்லியும் முதல் இடத்தில் உள்ளது என ஆய்வில் தகவல். கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு, காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பு வரம்பை மாற்றியமைத்தது. அதன்படி, காற்றில் உள்ள துகள்களின் சராசரி 1 மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. காற்று மாசு குறித்து ஆய்வு உலக சுகாதார அமைப்பால் காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவானது […]
தமிழகத்தின் அடையாளமான திகழும் நம் காவிரி மாசுபடுவதை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி ட்வீட். திமுக மகளிர் அணி தலைவரும், எம்பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், காவிரி ஆறு, மருந்து கழிவுகளாலும், ரசாயனப் பொருட்களாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும், பூச்சி கொல்லிகளாலும், மிகவும் மாசு பட்டிருப்பதாகத் ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து கழிவு, ரசாயன பொருட்கள் உள்ளிட்டவற்றால் காவிரி மாசுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. […]
ஆண்கள், பெண்கள் இருவருமே அடர்த்தியான அழகிய முடி இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அதிலும் பெண்கள் தங்களுக்கு முடி தான் அழகு என நினைப்பார்கள். எனவே தங்களுக்கு அடர்த்தியான, நீளமான முடி வேண்டும் என விரும்புவார்கள். ஆசைப்படும் அனைவருக்கும் அவ்வாறு அழகிய முடி அமைந்து விடுவதில்லை. காற்று மாசுபாடு மற்றும் சரியான கவனிப்பு இல்லாததன் காரணமாக முடி வளர்வது நின்று விடுவது மட்டுமல்லாமல் பலருக்கு முடி உதிரவும் தொடங்குகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் அதிக ஈரப்பதம் காரணமாக […]
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.1.21லட்சம் அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. காற்று மாசால் இந்தியாவில் கடந்தாண்டு 16 லட்சத்திற்கும் அதிகாமானோர் உயிரிழந்துள்ளதை அடுத்து கடும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை டெல்லி அரசு விதித்துள்ளது. வாகனங்களிலிருந்து வெளிவரும் மாசால் குழந்தைகள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். எனவே, வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசை குறைக்கவும் அறிவுறுத்தியதுடன், அரசு பிறப்பித்துள்ள மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் நொய்டாவின் நிறுவனங்கள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1.21 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டால் கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் 6.7 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் மக்கள் வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதாலும் எரிபொருள் சாதனங்கள் பயன்படுத்த கூடிய நிறுவனங்கள் அதிகரித்துள்ளதலும், காற்று மாசுபாடு மிக அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் பல லட்சக்கணக்கான உயிரிழப்புகளும் வருடம்தோறும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு மட்டும் காற்று மாசுபாட்டால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் எனும் […]
பெங்களூருவைச் சேர்ந்த லாப நோக்கமில்லாத ஒரு தொண்டு நிறுவனம், ஓர் ஆய்வை மேற்கொண்டது. 2017 முதல் 2018 வரை நகரத்துக்கு சுமார் 2000 வாகன ஓட்டிகளையும், மேலும் சில சாலையோரமாகவே குடியிருக்கும் மக்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதன்மூலம், தெலங்கானாவின் தலைநகரமான ஹைதராபாத்திலும் ஆய்வு மேற்கொண்டார்கள். அதில், 2000 மக்களில் 76 சதவிகிதம் பேருக்கு காற்றின் தரக் குறைபாட்டால் ஏற்படும் உடல் பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. மற்றுமொரு ஆய்வில், சுமார் 39 சதவிகிதம் மக்களுக்கு காற்று மாசால் சுவாசப் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் தெரிந்துள்ளன. […]
டெல்லி காற்று மாசுபாட்டுக்குத் தீர்வாக பாராளுமன்றக் கூட்டத்தை தென்னிந்தியாவில் நடத்த அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி பாராளுமன்றத்தில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பாக குறுகிய நேரம் விவாதம் நடந்தது. இதில் கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஏ.நவநீதகிருஷ்ணன் (அ.தி.மு.க.) ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். அப்போது பேசிய நவநீதகிருஷ்ணன், “டெல்லியில் வசிக்கும் அனைவரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். மனிதர்கள் நீண்ட வாழ்க்கை வாழ முடியாத சூழல் நிலவி வருகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அனைவரும் பொது […]
இலங்கை அணிக்கெதிரான இரண்டாம் நாள் டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்குப்பின்னர் ஆட வந்த இலங்கை அணியினர் பலர் டெல்லி காற்று மிகவும் அசுத்தமாக உள்ளதாக புகார் கூறி மாஸ்க் அணிந்து கொண்டனர்.இதனால் சினமுற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்திய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 536 ரன் என்று விளையாடிக் கொண்டிருந்த போது ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக டிக்ளேர் செய்துவிட்டார். புது டெல்லியில் காற்று மாசு குறித்து புகார்கள் இருந்த போதிலும் இந்த பிரச்சினை […]