திமுக தனது அரசியல் நாடகத்தை நிறுத்தி;நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது.அதன்படி, இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதற்கிடையில்,தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி […]