பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து போடும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக சென்ற போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் தற்பொழுது வரை போலியோ பாதிப்பு காணப்படுவதால் இந்த ஆண்டுக்குள் போலியோவை ஒழிக்கும் விதமாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்துவதற்கு எதிர்ப்புகளும் எழும்பி வருகிறதாம். […]
ஜனவரி 31ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் 5 வயதுககுட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து தமிழகம் முழுவதிலும் வழங்கப்படுகிறது. இந்த போலியோ சொட்டு மருந்து, இளம்பிள்ளை வாதம் வராமல் பாதுகாப்பதற்காக குழந்தைகளுக்கு போடப்பபடுகிறது. இந்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி போடப்பட இருந்த போலியோ சொட்டு மருந்து கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை […]
குழந்தைகளுக்கு அளிக்கப்படும் போலியோ தடுப்பு மருந்தில் கலப்படம் இருந்ததாக கூறி, காசியாபாத்தைச் சேர்ந்த மருந்துக் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிருந்து, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் புட்டிகளில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது ஒரு அதிர்ச்சியையும் , பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. DINASUVADU
உங்கள் வீட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டிருந்தாலும் இன்றும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்கள். இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. எனினும் அது மீண்டும் தலை தூக்காமல் இருக்க இந்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் தொடரவேண்டியுள்ளது.