தமிழகம் முழுவதிலும் இன்று 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இளம்பிள்ளை வாதம் நோய் வராமல் தடுப்பதற்காக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கால அளவில் கொடுக்கக்கூடிய போலியோ சொட்டு மருந்து வருடத்திற்கு இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றும் தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், […]
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ பாதிப்பு உள்ளது. போலியோ பாதிப்பை தடுப்பதற்கு, பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆப்பிரிக்க நாடுகள் முற்றிலுமாக போலியோ நோயில் இருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஆப்பிரிக்க கண்டமும் போலியோ இல்லாத நாடாக மாறியுள்ளது. இதனையடுத்து, தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ பாதிப்பு உள்ளது.
போலியோ சொட்டு மருந்து அனைத்து குழந்தைகளுக்கும் முக்கியமான ஓன்று ஆகும். தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது. மலத் துகள்களினால் மாசடைந்த நீர், அல்லது உணவு வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இளம்பிள்ளை வாத நோய் தொற்றுகிறது. இது போலியோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.இந்தநோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. இந்தியாவில் குழந்தைகளுக்கு வாய் வழியாக போடப்படும் சொட்டு மருந்து மூலம், நாட்டில் […]
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகம் முழுவதும் இன்று 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக,தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, 2ம் கட்ட முகாமை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும் என்றும், கடந்த 14 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குவதாகவும் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளன. கடந்த ஜனவரியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக நாளை அளிக்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஏற்கனவே கொடுத்திருந்தாலும், நாளைய முகாமிலும் […]
இன்று காலை சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து அளித்து துவங்கி வைத்தார் . இதன் ஒருபடியாக மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வீரராகவ ராவ் அவர்களும் முனிச்சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்தை குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.