விராட் கோலியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தானும் ஒரு சவால் விடுப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். ராகுலின் ட்விட்டர் பக்கத்தில் விடுக்கப்பட்டுள்ள பதிவில், எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்றும், இல்லை எனில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசிய அளவிலான போராட்டம் நடத்தப்பட்டு, விலை குறைக்க கட்டாயம் ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான பிரதமரின் பதிலை தான் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் ராகுல் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்