தமிழகத்தில் வழக்குகளில் கைதாகும் நபர்களிடம் காவல் நிலையங்களில் வைத்து இரவு நேரத்தில் விசாரணை நடத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவில் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.குறிப்பாக,காவல்நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது”,என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை,திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த விவகாரம் சர்ச்சை பெரும் ஆன நிலையில்,தற்போது டிஜிபி […]
மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள சரவணன் அவர்கள் விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். இன்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் என்பது தலைதூக்கியுள்ளது. இதற்கு மத்தியில் சில நேர்மையான அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ள சரவணன் அவர்கள் விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில் ‘லஞ்சம் பெறுவதில்லை’ – என் பெயரை சொல்லிக்கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமுகமாக முடித்து தருவதாக […]
பொதுமக்கள் வசதிக்காக, செம்மஞ்சேரி காவல் நிலையம் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. குறிப்பாக சென்னையில், வெள்ளப்பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ளநிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இக்காட்டான […]
அமெரிக்க கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் பிளாய்டின் மரணம் தொடர்பாக அமெரிக்காவில் வெடித்த போராட்ட நேரத்தில் போலீஸ் காவல் நிலையத்தில் தீ வைத்த அமெரிக்க நபருக்கு 12 மில்லியன் டாலர் அதாவது 88 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் பிளாயிட் அவர்கள் மீது கடைக்காரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அதிகாரி ஒருவர் ஜார்ஜின் கழுத்தில் மண்டியிட்டு அவர் மூச்சு திணறுகிற வரை அவர் கழுத்தில் அழுத்தம் கொடுத்ததால் ஜார்ஜ் பரிதாபமாக […]
பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் நிலையங்களே பாலியல் குற்றங்கள் செய்து கொலை களங்களாக மாறி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய காவல் நிலையங்களே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில காலங்களாகவே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் பெருகி வருவது அன்றாடம் பதிவு செய்யப்பட கூடிய போக்சோ சட்டங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது. தொடர்ச்சியான வன்கொடுமை […]
இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால் மின் வாரிய ஊழியர், காவல் நிலையத்திற்கு மின் வசதியை துண்டித்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய எஸ்.ஐ. வாகன சோதனை நடத்தினார். அப்பொழுது உரிய ஆவணங்களின்றி, 3 பேருடன் பயணம் செய்த ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார். அது, மின்வாரிய ஊழியர் சைமன் என்பவரின் இருசக்கர வாகனம் என விசாரணயின்போது தெரியவந்தது. போலீசாரின் இந்த செயல் குறித்து உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் சைமன் புகாரளித்தார். […]
வெட்டிய தலையை கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்ற கொடூர கொலையாளி. சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை புதுவயல் தெருவை சேர்ந்தவர் யூசப் ரகுமான். இவர் புதுவையில் இறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டணத்தில் வசிக்கும் இவரது அண்ணன் சகுபர் க்கும் இடையே இரண்டு கோடி மதிப்பிலான இடம் தொடர்பாக சொத்துப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், […]
காவல்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பெங்களூரு காவல் நிலையத்திற்கு சீல் வைப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூரின் மையப் பகுதியில் உள்ள ப்பன் பார்க் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த, கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா பரிசோதனையில், பாசிட்டிவ் என சோதனை முடிவுகள் வெளியானது. இந்நிலையில், இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, காவல்நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவரது […]
மாமியார் வீட்டோடு காவல்நிலையத்தை ஒப்பிட்டு டிக்டாக் செய்த இளைஞர்கள் கைது. இன்று இளம் தலைமுறையினர் அதிகமாக இணையத்தில் தான் உலா வருகின்றனர்.இவர் இணையத்திற்கு அடிமையாகி உள்ளார்கள் என்று சொல்வதை விட, இணையம் தான் இவர்களை அடிமையாக்கி உள்ளது என்று சொல்லலாம். இன்று கண்டுபிடிக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகள், இளம் தலைமுறையினரை கவரும் வண்ணமாக தான் உள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டையில் இரண்டு இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் சென்றதால், போலீசார் அவர்களது வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்த வாகனத்தை திரும்ப பெற […]
மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை தாக்கிய கொரோனா வைரஸ். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களை காக்கும் பணியில், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் வெளியில் வந்து பணி செய்கின்றனர். இந்நிலையில், மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனையடுத்து, […]
மனிதர்களின் ஒரு கையாக இன்று விளங்கிக்கொண்டிருப்பது கைபேசிகள் இவையே இல்லையென்றால் அன்றாட வாழ்கையில் அடுத்த நகர்வுக்கு செல்வது சிரமமாக ஆகிவிட்டது. இதில் சமுக வலைத்தளங்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.சமூக வலைதலங்களால் பல பல நல்லது நடந்தாலும் இதன் மூலம் பல பிரச்சனைகள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சமுக வலைதளங்களில் முக்கிய இடத்தில் இருப்பது முகநூல் மற்றும் வாட்ஸ் அப் இந்த இரண்டும் மக்களிடயே அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது .இவற்றின் முலம் வாழ்த்து செய்திகள்,புகைப்படம் ,வீடியோ ,கோப்புகள் என பல்வேற்பட்ட […]