ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருவாய்த்துறையினருடன் போலீஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தில் உள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் […]
அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்நிலையத்தில் புகார். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தில் உள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே […]
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக செந்தில் குமாரிடம் 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர். அதே சமயம், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு […]
சென்னை குன்றத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 43 பவுன் நகையை குப்பையில் போட்டு சென்ற பெண். சென்னை குன்றத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், 43 பவுன் நகையை குப்பையில் போட்டுசென்றுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், மன அழுத்தத்தில் இருந்த பெண் நகைகளை எடுத்துவந்து குப்பை தொட்டியில் போட்டு சென்றதாக தெரியவந்துள்ளது. .
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை கேரளா மாநிலம் பாலக்காட்டில் மீட்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் யுனிஸ், இவர் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி திவ்யா பாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் 29-ஆம் தேதி அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை திவ்யபாரதி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம […]
அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Websites-களில் வரும் Link-களில் சென்று எந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Websites-களில் வரும் Link-களில் சென்று Mobile No, Account No, OTP, Debit Card, Cvv போன்ற எந்த தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஊரப்பாக்கத்தை சேர்ந்த திரு.சுதாகர் என்பவர் […]
தென்னாப்பிரிக்காவின் தெற்கு நகரமான கிழக்கு லண்டனில் உள்ள ஒரு தற்காலிக இரவு விடுதியில் மர்மமான முறையில் 20 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “கிழக்கு லண்டனில் உள்ள சினரி பூங்காவில் உள்ள உள்ளூர் உணவகத்தில் 17 பேர் இறந்துகிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அங்குள்ள வளாகத்தில் சிதறிக்கிடந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்பொழுது மேலும் 3 இளைஞர்கள் இறந்ததால் பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் உடல்களில் எந்தவித வெளிக்காயங்களோ […]
ஒடிசாவில் புதிய ஆடை வாங்க பணம் கொடுக்காததால் தாயை, மகன் கோடாரியால் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில், கியோன்ஜார் மாவட்டத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் பண்டிகையை முன்னிட்டு தனது தாயாரிடம் புதிய ஆடை வாங்க பணம் கேட்டுள்ளார். அவரது தாயார் பணம் கொடுக்க மறுத்ததால், தாயாரை கோடாரியால் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார். நாயக்கோட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணமணி ஹெம்ப்ராம் கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட 10 வயது சிறுவன் ண்டிகையை […]
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் பெங்களுருவில் கைது. பெங்களுருவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகனும், பாலிவுட் பிரபல நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருமான சித்தாந்த் கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் நேற்று இரவு பெங்களூரு ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் போலீசார் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டார். ஹோட்டலில் நடந்த விருந்தில் சித்தாந்த் கபூர் உள்பட 6 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது. […]
கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் கைது. அண்ணாநகர் முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபர் ராஜேஷை கடத்தி சொத்துக்களை அபகரித்த புகாரில் பல மாதங்களாக தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த, சரவணன் தற்போது கைது செய்யப்பட்டார். கடந்த 2019ல் தொழிலதிபர் ராஜேஷை கடத்தி மிரட்டி சொத்துகளை அபகரித்த புகாரில், முன்னாள் காவல் ஆய்வாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த […]
தூத்துக்குடியில்மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 3 பேர் மீது ரயில் ஏறி இறங்கியதில் 2 பேர் உயிரிழப்பு. தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 3 பேர் மீது ரயில் ஏறி இறங்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெபசிங், திருவிக நகரை சேர்ந்த மாரிமுத்து, பசும்பொன் நகரை சேர்ந்த மாரிமுத்து ஆகிய 3 பேரும் மதுபோதையில் 3-வது மைல் மேம்பாலத்தின் கீழே உள்ள தண்டவாளத்தில் உறங்கியுள்ளனர். அப்போது அந்த வழியே […]
கணவன் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காரணத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இன்று ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு குழந்தைகள் முதல் முதியோர் வரை பலர் அடிமையாகியுள்ளனர். இதனால் தங்களது பணத்தை இழப்பது மட்டுமல்லாமல், தங்களது குடும்பத்தையும் சிலர் இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த வகையில், சென்னை நந்தபாக்கத்தில் கணவன் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காரணத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மகனின் பள்ளி கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை கணவர் எடுத்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதால், மனமுடைந்த மனைவி […]
தந்தூரி சிக்கன் சாப்பிட்டு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் உணவகத்துக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12ம் வகுப்பு மாணவர் திருமுருகன் (வயது 17) என்பவர் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என அந்த மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார் என தகவல் கூறப்பட்டியிருந்தது. கடந்த 24-ஆம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பின் மாணவனுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட […]
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களுக்கு வீடியோ வெளியிட்ட தமிழக காவலர். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களை பார்த்து குறைகளை களைய முயன்ற காவலருக்கு, டிஜிபியை நேரில் பார்க்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் 2016-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இணைந்ததாகவும், தன்னுடைய குறைகளை கூற, டிஜிபி முகாம் அலுவலகத்திற்கு பலமுறை வந்ததாகவும், ஆனால்,அலுவலர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி சந்திக்க அனுமதிப்பதில்லை. எனவே, இந்த வீடியோவை […]
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலை. ஜம்மு காஷ்மீர் மாநிலம், அமர்நாத் யாத்திரையின் முக்கிய பாதையான அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் பாதுகாப்புப் படையினருடன் நடத்த மோதலில் 3 பேர் பயங்கரவாதிகள் சுட்டுகொலைப்பட்டனர். இந்த வழித்தடத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதில் இன்றைய என்கவுன்டர் ஒரு பெரிய வெற்றி என்று அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இன்று சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளில், ஒருவர் நீண்ட நேரமாக உயிர் பிழைத்த […]
கிரிப்டோ கரன்சி மோசடியில் இரு காவலர்கள் சிக்கி ஏமாற்றம் அடைந்துள்ளதாக சென்னை காவல ஆணையர் தகவல். கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி காவலர்கள் இருவரே ஏமாற்றப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிரிப்டோ கரன்சி மோசடியில் 2 காவலர்களும், அவர்களை சார்ந்தவர்களும் சுமார் ரூ.1.44 கோடி அளவுக்கு பணத்தை இழந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியால் ஈர்க்கப்பட்டு பல தவணை முறையில் பணத்தை செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் சமூக வலைதளங்கள் […]
காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என்று விஜயலட்சுமி என்பாரின் வழக்கில் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. காவல் நிலையம் துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் வந்தால் நீதிமன்றம் கண்மூடி இருக்காது என்றும் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் வேலைக்காக செல்வோர் பணி விசா பெற்று செல்லவும், சுற்றுலா விசா பயன்படுத்த வேண்டாம் என தாம்பரம் ஆணையர் ரவி அறிவுறுத்தியுள்ளார். வீட்டு வேலைக்கு சென்று குவைத்தில் சிக்கி தவித்த மஞ்சுளா என்ற பெண்மணி 5 நாட்களில் மீட்கப்பட்டார் என்றும் பெண்ணை விரைவாக மீட்ட பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு போலீசார், உதவி ஆணையருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆணையர், விசாரிக்காமல் வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும் பணி விசா எடுத்து முறைப்படி செல்ல […]
ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த துவாரகா பகுதியில் உள்ள ஜி கொத்தபள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்த யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தலாரி வெங்கட ராவ் என்பவர் தான் காரணம் என உள்ளூர் மக்கள் அவரை […]
சுற்றுலா வரும் பயணிகள் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவரக்கூடாது என அறிவுறுத்தல். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இருந்த சமயத்தில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதில், சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது, தொற்று பரவல் குறைந்த நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டை விட்டு […]