மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட காவல் நிலையத்தில் மயமான 60 மதுபாட்டில்களை அனைத்தையும் எலிகள் குடித்துவிட்டதாக காவல்துறை கூறியுள்ளது. சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை சிந்த்வாரா மாவட்ட காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், நீதிமன்றத்தில் மதுபாட்டில்கள் சாட்சியங்கள் காட்டப்பட வேண்டும் என்பதால் கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் அனைத்தும் காவல் நிலையத்தின் ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 60-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை எலிகள் குடித்து காலி செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு […]
திருச்சிமாவட்டம் திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி மணிகண்டன் மீது கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆட்டோ ட்ரைவர் முருகன் என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது. இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் மணிகண்டனின் எதிரிகள் அவரை தாக்குவதற்கு பல வகைகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவமும் அவரை பழிவாங்கும் நடவடிக்கை தான் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது […]
கடந்த 27-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முதல் வாசல் முன் பேரிகேட் (தடுப்பு) அருகில் கருக்கா வினோத் எனும் நபர் பெட்ரோல் குண்டு வீசினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து மேலும் இரண்டு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கைப்பற்றினர். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு […]
சென்னை அம்பத்தூர் அருகே பட்டரவாக்கத்தில் வட மாநில தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவாகரத்தில் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆவடி காவல் எல்லை, அம்பத்தூர் தொழிர்பேட்டை யில் வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் தெருவில். வழக்கு விசாரணைக்காக சென்ற காவலர்களை கம்பு, கட்டை, கல் போன்றவற்றால் வட மாநில தொழிலாளர்கள் […]
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காலிப்பாளையம் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த தொட்டியில் அதிர்ச்சியூட்டும் வண்ணம் மனித எலும்புகள் கிடந்துள்ளது. இதனையடுத்து, சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் தொட்டியில் இருந்து அகற்றி, இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் மனித எலும்புகள் வைத்த இடத்தில் இருந்து காணாமல் போய்விட்டது. இதனை தொடர்ந்து, இது தொடர்பாக போலிஸாருக்கு தகவல் அளித்தனர். […]
கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர் விருத்தாச்சலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஆனந்த் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஜீவா பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்று ஆனந்த் அவரிடம் பேசிய போது, இருவருக்கும் இடையே […]
நாமக்கல் மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோயில் அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் இந்த விபத்தின் போது வீட்டில் இருந்த பார்த்தசாரதி, தனலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்தானது சிலிண்டரை மாற்றும்போது கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதின் காரணமாக ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், கேஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக […]
கடலூர் மாவட்டம் புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இவர் விருத்தாச்சலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மேலும் அதே ஊரை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் ஆனந்த் மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஜீவா பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்று ஆனந்த் அவரிடம் பேசிய போது, இருவருக்கும் இடையே […]
இருசக்கர வாகனங்கள் ஒன்றாக பயணித்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி இன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னையில் மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது சென்னை காவல்துறை. சென்னை கடற்கரை சாலைகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை 6 […]
ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக இருக்கும் சக்திவேல் என்பவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரகவியல் மருத்துவராக இருப்பவர் சக்திவேல். இவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . மருத்துவரின் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர் ஒருவரே மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தின் வாயிலாக இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இருக்க ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கையை எடுத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர்கள் சமூக வலைத்தளம் மூலம் கெட்டுவிடாமல் இருக்க, ரவுடிகளின் சமூக வலைதள பதிவால் ஈர்க்கப்படமால் இருக்க ராஜஸ்தான் காவல்துறையினர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதில், சைபர் கிரைம் மூலம் சமூக வலைதளங்களில் செயல்படும் குற்றவாளிகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இளைஞர்கள் ரவுடிகளின் சமூக வலைதள பதிவால் ஈர்க்கப்படாமல் இருக்க மாவட்டந்தோறும் கவுன்சலிங் […]
இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு நெருங்கி வருவதையடுத்து சென்னையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை முழுவதும் போலீசார் விடிய விடிய வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட நிலையில் 115 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் புத்தாண்டு பாதுகாப்பு நடவடிக்கையாக […]
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வெளியே வந்த 25 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அதிமுக சார்பில் இன்று பந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னதாக புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வெளியே வந்த 25 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு தற்போது ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்கு செல்லும் போலீஸாரின் வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், போலீசார் […]
கர்நாடகாவில் மாணவன் சேட்டை செய்ததால், ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்கிய நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கர்நாடகா, கதக் மாவட்டத்தில் 4ம் வகுப்பு மாணவன் சேட்டை செய்ததால், ஆசிரியர் இரும்பு கம்பியால் தாக்கி, சிறுவனை முதல் தளத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். தடுக்க வந்த சிறுவனின் தாயும், ஆசிரியருமான கீதா மீதும் ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளார். மாணவன் பலத்த காயத்துடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். மாணவனை தாக்கிய ஒப்பந்த ஆசிரியர் […]
கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்கொலை செய்த தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி, தினேஷ் வீட்டில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கஞ்சா வேட்டை நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை […]
இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம். இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே […]
லுடோவில் பணத்தையெல்லாம் இழந்ததால், தன்னையே பணயம் வைத்து விளையாடிய பெண். உத்தரபிரதேசத்தின் பிரதாப்கரில், நாகர் கோட்வாலியில் உள்ள தேவ்கலி பகுதியில் வசித்து வரும் ரேணு என்ற லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவரது கணவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் அனுப்பும் பணத்தையெல்லாம் சூதாடி அழித்து வந்துள்ளார். அவள் தன் வீட்டு உரிமையாளருடன் தொடர்ந்து விளையாட்டை விளையாடி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் இழந்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னையே பணயமாக […]
துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணை. பெரம்பலூர் மாவட்டம் ஈச்சங்காட்டில் வீட்டின் முன் உள்ள தண்ணீர் தொட்டில் துப்பாக்கி குண்டு வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெருமாள் என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டியிலும், புஷபா என்பவரது வீடு வாசலும் துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாரணமங்கலம் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் இருந்து குண்டுகள் வந்து விழுந்ததா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.