சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளன. 2010-ல் துணை முதல்வராக இருந்த ஸ்டாலினின் உதவியாளர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்ததாக 2011-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தன்னை டாக்டர் என கூறி வந்த அவர், திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட […]
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காவல்துறைக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது, மேலும் அவரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கும் வீடியோவும் நீதிமன்றத்தில் […]
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் கடந்த ஜூன் 28ம் தேதி அன்று விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டுக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று காலை அவரது உருவப் படத்திற்கு மலர் […]
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல் மற்றொரு அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் 14.1.2025 அன்று பட்டியலின இளைஞரை போலீசார் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் அபுதுல்லா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சுயசம்பு ஆகியோர் இளைஞரை தாக்கியதாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் […]
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ”ரொம்ப Sorry-ம்மா… நடக்கக்கூடாதது நடந்திருச்சு” என்று கூறி ஆறுதல் தெரிவித்தார். இதனை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில், ”முதல்வரின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம், கொலை செய்தது உங்கள் அரசு. ‘SORRY’ என்பது தான் உங்கள் பதிலா? முதல்வரின் பேச்சில் […]
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின்போது அவரை போலீசார் கடுமையாக பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், சீருடை அணியாத காவலர்கள் அஜித் குமாரை கம்பத்தில் கட்டி, கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. […]
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, மன்சூர் அலிகானை கைது செய்து விசாரிக்கலாமா அல்லது விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பலாமா என காவல்துறையினர் ஆலோசித்து வந்தநிலையில், மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க சென்னை ஆயிரம் விளக்கு போலீசார், 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ அனுப்பியுள்ளனர். மேலும், அவர் மீது NWC வழக்குப்பதிவு […]
ஹரியானா மாநிலத்தில் சுக்புரா காவல் நிலையத்தில் தாமதமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ததற்காக பணியாற்றிய அனைத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து அரியானா உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தலைமையில், கடந்த வெள்ளிக்கிழமை, விகாஸ் பவனில் வைத்து மாவட்ட மக்கள் தொடர்பு மற்றும் குறைதீர்ப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 25 புகார்கள் குறிப்பிடப்பட்டது. அதில் ஒரு புகாராக, போலீசார் தாமதமாக வழக்குப்பதிவு […]
காவல் நிலைய பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள விளம்பரதாரரின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது,தமிழகத்தில் உள்ள சில காவல் நிலையங்களில் தனியார் விளம்பரப்பலகைகள் இடம் பெற்றிருப்பது பொதுமக்கள் பார்வையில் தவறான புரிதலை ஏற்படுத்துகிறது,எனவே,அனைத்து காவல் நிலைய பெயர் பலகைகளில் காவல்நிலைய பெயரைத் தவிர, விளம்பரதாரரின் பெயர்கள் […]
தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்பொழுது அதில் சில பதிவுகள் கிடைத்துள்ளதாக ஐஜி சங்கர் தெரிவித்தார். சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிந்ததாக கூறப்பட்டது. இதனை தொழில்நுட்பம் மூலமாக […]
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த காவலர் தாமஸ் பிரான்சிஸிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் செய்த […]
கன்னியாகுமரியில் காதலர்கள் இருவரும் வீட்டார்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த காதலனை சரமாரியாக தாக்கியதோடு காதலியை காரில் ஏற்றிக் கொண்டு சென்றதாக தெரிகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் 28 வயதான பியூட்டலின். இவரும் வெள்ளிச்சந்தைப் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் […]
பாட்னாவில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர்ரென முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்தில் முதல் தளத்தில் வைக்கப்பட்டு இருந்த பீகார் பள்ளி தேர்வு ஊழல் தொடர்பான சில பிரதிகள் தீப்பிடித்தன. தீ பிடித்த பிரதிகளால் இந்த வழக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஏஎஸ்பி ஸ்வர்ன் பிரபாத் தெரிவித்தார். […]
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு சக காவலர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். அண்ணா சாலை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக வேலை செய்து வருபவர் ஷில்பா. இவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு சக காவல் நிலையத்தில் வேலை செய்யும் காவலர்கள் சேர்ந்து ஷில்பாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். மேலும் வீடுகளில் குடும்பத்தினர் போன்று சீர் வரிசைகள் கொடுத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்நிலையம் திருமுகன்ப்பூண்டி காவல்நிலையம். இந்த காவல்நிலையத்தில் ஒரு அறிவிப்பு நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதென்னவென்றால், காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வெறுப்பவர்கள் நைட்டி மற்றும் சார்ட்ஸ் அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளானர். மேலும் லுங்கி அணிவதையும் தவிர்க்குமாறு காவல்துறையினர் கூறுவதாக பொது மக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து, மாநகர காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் உமா அவர்கள் கூறுகையில், அந்த அறிவிப்பில் இருக்கும் உடை கட்டுப்பாடு கட்டாயம் அல்ல […]
ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் போலீசார் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு-காஷ்மீர்: தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் மீது அதிகாலையில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர் மேலும் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஒரு காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே இந்த சம்பவ நிகழந்த இடத்துக்கு வந்த பாதுகாப்புப் படையினர், […]
காவல் நிலையங்களில் சென்று புகார் தெரிவிப்பதற்கு பதிலாக இனி ஆன்லைன்-ல் புகார் தெரிவிக்கும் முறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.இதனை வரும் 6மாதத்திற்குள் அனைத்து காவல் நிலையங்களிலும் செயல்பட இருக்கின்றன. இதன் படி காவல் துறையினர் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈமெயில் ,தபால் ,எஸ் எம் எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று காவல் துறையில் அளிக்கும் புகார் மீதான வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி ஜி பி யின் 2016ஆம் ஆண்டின் சுற்றறிக்கை மீண்டும் நினைவு படுத்த […]
தூத்துக்குடியில் கடந்த 22ம்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றமான நிலை நிலவியது. நெல்லை, குமரி, மதுரை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். இன்னும் தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் 3 வித வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் […]
அதிநவீன வசதிகள் மற்றும் ஏ.சி. வசதியுடன் கூடிய காவல் நிலையத்தை ஆந்திர மாநில துணை முதலமைச்சர் சின்னராஜப்பா திறந்து வைத்தார். இந்த காவல் நிலையம் முற்றிலும் ஏ.சி. வசதியுடனும், கைதிகளுக்கு கூட படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேப்பர் பயன்பாடு இல்லாமல் முற்றிலும் கணினி வசதியுடன் கூடிய காவல் நிலையமாக செயல்பட உள்ளது. குறிப்பாக இங்குள்ள போலீசார் வழக்கமான காக்கி சீறுடை அணிவதற்கு பதிலாக, நீல நிற சட்டை, கருநீல நிற பேண்ட் அணிந்துள்ளனர். புகார் அளிக்க […]
லால்குடி:சுப்ரமணியன் மகன் ஞானமணி லால்குடி ஆங்கரை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் . நடராஜன் மகன் பாலகுமார. இருவரும் அடிக்கடி இடையாற்றுமங்கலம் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் போலீசார் இடையாற்றுமங்கலம் அடுத்த கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரோந்து பணியில் இடுபட்டிருந்தனர் அப்போது மேற்கண்ட இருவரும் மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து 2 பேரையும் போலிசார் […]