திரிபுராவில் ஒரே நேரத்தில் 220 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிஷால்கர் நகரில் கோகுல்நகர் போலீசாரும், எல்லைப்பாதுகாப்புப் படையினரும் ரகசிய தகவலின்பேரில், சந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, சாக்கு மூட்டைகளிலும், பிளாஸ்டிக் பேரல்களிலும் கஞ்சா இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவை பீகாருக்கு கடத்தப்பட இருந்தது தெரியவந்தது. 220 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். திரிபுரா மாநிலத்தில் அவ்வப்போது கஞ்சா பிடிபட்டாலும், […]