ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொத்தடிமைகளாக கடத்த முயன்ற 31 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர். தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆடை தொழிற்சாலைகளில் வட மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இதில் பெண்களும், சிறுமி,சிறுவர்களும் அடங்குவர்.இவர்கள் அனைவரும் இடைத்தரகர்கள் மூலமாக இங்கு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். மேலும் இந்த இடைத்தரகர்கள் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக இங்கு விட்டு செல்வதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்து நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு […]